Skip to main content

Advertisement

சுக்மாவை ஒத்தி வைக்க பரிசீலனை!

 

வரும் ஆகஸ்டு மாதம் சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் சுக்மா விளையாட்டுப் போட்டி ஒத்தி வைக்கப்பட வேண்டும்! 

மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை, அப்போட்டியை நடத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என பரிந்துரைத்துள்ளார் சிலாங்கூர் சுல்தான். 

அதோடு, ஷா ஆலாம் அரங்கத்தின் கட்டுமானப் பணிகளும் இன்னும் முழுமை பெறாததை அவர் சுட்டிக் காட்டினார். 

-----  

இதனிடையே சுக்மா போட்டி குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் சீர்த்தூக்கிப் பார்க்கிறது சிலாங்கூர் அரசு! 

அதில் சுல்தானின் அந்த பரிந்துரையும் அடங்கும். 

சுக்மா போட்டியை ஒத்தி வைக்கலாமா அல்லது திட்டமிட்டபடி நடத்தலாமா என்று முடிவு அனைத்துக் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னர் அறிவிக்கப்படும். 

----- 

EPL புள்ளிப்பட்டியலில் 17ஆம் இடத்தில் இருக்கும் West Ham இரண்டாம் டிவிஷனுக்குத் தள்ளப்படும் அபாயத்திலிருந்து மீளும் இலக்கோடு நாளை Crystal Palaceசைச் சந்திக்கிறது. 

அவ்வாட்டத்தின் நேரடி ஒளிபரப்பை அதிகாலை மூன்று மணி Astro அலைவரிசை 810 மற்றும் சூக்கா செயலியில் காணலாம். 

 

Stadiumastro விளையாட்டுத் தகவல் மையம். அண்மைய விளையாட்டுச் செய்திகளுக்கு Stadiumastro.comமை வலம் வாருங்கள். 

RAAGA Aaha Siranta Isai!