
Atletico Madrid-டுக்கு எதிரான Champions லீக் அரையிறுதி முதற்கட்ட ஆட்டத்தில், Arsenal, இரண்டு முக்கிய வீரர்களை இழக்கலாம் !
Jurrien Timber, Kai Havertz ஆகியோரே அவர்களாவர்.
அவர்கள் அடிபட்டிருப்பதே அதற்குக் காரணம்.
அதே வேளை, காயத்தால் அவதிப்பட்டு, தற்போது குணமடைந்து அணிக்குத் திரும்பியிருக்கும் Eberechi Eze-வும், Riccardo Calafiori-யும், நாளை திடலில் கால் பதிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Atletico Madrid - Arsenal மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820-திலும், Sooka-விலும், நேரலையாகக் காணலாம்.
----------
பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்தால், Tottenham, Marcus Rashford-டை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாகவுள்ளதாம் !
ஆனால் Barcelona-வோ, அந்த தாக்குதல் ஆட்டக்காரருக்கு, இன்னோர் இரவல் ஒப்பந்தம் வழங்க தயாராக உள்ளதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த 28 வயது Manchester United வீரர், தற்போது Barca-வுக்காக இரவலில் விளையாடி வருகிறார்.
---------
அண்மைய Negeri Sembilan நீலாய் உள்ளரங்கு சைக்கிளோட்ட போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்றிருந்தாலும், Azizulhasni Awang உலக தரவரிசையில் மூன்று இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் !
ஒலிம்பிக் அல்லாத ஆண்டில், UCI தரவரிசை முறையில், ஒவ்வொரு பிரிவிலும் ஒரே சிறந்த முடிவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வதால், அவரின் பல பதக்கங்கள் சேர்க்கப்படாமல், புள்ளிகள் குறைந்து தரவரிசை இறங்கியது.
கடந்த வாரம் 18வது இடத்தில் இருந்த அவர், தற்போது 21வது இடத்தில் உள்ளார்.
----------
அனுபவமுள்ள பூப்பந்து வீராங்கனை M.தீனாவுடன் இணைந்து விளையாடும் போது, இளைய வீராங்கனைகள் தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, பொறுமையுடன் செயல்பட வேண்டும் என, தேசிய இரட்டையர் பயிற்சி இயக்குநர் தெரிவித்துள்ளார் !
ஊபர் கிண்ண போட்டியில், குழு நிலையிலான இரண்டு ஆட்டங்களிலும், Ong Xin Yee, தீனா-வுடன் இணைந்து விளையாடிய பாணியைப் பார்வையிட்ட அவர், அவ்வாறு கூறினார்.
இவ்வேளையில், தோமஸ் கிண்ணத்தில், B குழுவின் வெற்றியாளரை தீர்மானிக்க, மலேசியா, ஜப்பானுடன் மோதுகிறது.
தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.