
இன்று தொடங்கும் தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Aaron Chia-Soh Wooi Yik, நாட்டின் முக்கிய நம்பிக்கையாகக் கருதப்படுகின்றனர் !
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி என பெரிய பெரிய போட்டிகளில், சில தேசிய வீரர்கள் தோல்வியுற்று வெளியேறிய போதும், இந்த இரட்டையர் கடைசி வரை நன்கு விளையாடி வந்ததே அதற்குக் சான்று என, Astro Arena-வின் முன்னாள் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Aaron Chia- Wooi Yik-குடன், ஆடவர் இரட்டையர் பிரிவில் Man Wei Chong-Tee Kai Wun, Goh Sze Fei-Nur Izzuddin ஆகியோரும், தேசிய அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
----------
Barcelona, இப்பருவம் முழுவதுமே இளைய நட்சத்திரம் Lamine Yamal-லை இழக்கும் !
அந்த மத்தியதிடலாட்டக்காரருக்கு அடிபட்டிருப்பதே அதற்குக் காரணம்.
வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றும் இலக்கோடு, Getafe-வுக்கு எதிரான நாளைய லா லீகா ஆட்டத்தில், Barca, அவரின்றி களமிறங்குகிறது.
----------
Real Madrid-டின் Arda Guler, Real Betis-சுக்கு எதிரான நாளைய லா லீகா ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகமே !
அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதே அதற்குக் காரணம்.
எனினும், அந்த மத்தியதிடலாட்டக்காரர், 2026 உலகக் கிண்ணம் தொடங்குவதற்கு முன்பே, தனது தேசிய அணிக்காக விளையாடும் அளவுக்கு முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.