Skip to main content
புதிய பிரசவ விடுப்பு அலாவன்ஸ்- பிரதமர் அறிவிப்பு!

 

பெண் ஊழியர்களுக்கான பிரசவ காலத்திற்குப் பிந்தைய விடுப்பிற்காக புதிய allowance திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் பிரதமர்! 

ஒரே தடவையாக கொடுக்கப்படும் அந்த அலாவன்ஸ், தங்களின் சம்பளத்தில் 80 விழுக்காட்டைப் பெற தகுதியுடைய ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிருக்கு நன்மையளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

98 நாள் பிரசவ விடுப்பை முடித்து கூடுதல் 30 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளும் தாய்மார்களுக்கு, அந்த allowance வழங்கப்படும். 

இதனிடையே வெளிநாட்டில் வேலை செய்யும் மலேசியர்களுக்கு பாதுகாப்பு வழங்க,சுய தொழில் சமூக பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் பரிசீலிக்கின்றது. 

தலைநகர் புக்கிட் ஜாலிலில் உழைப்பாளர் தினத்தை ஒட்டி நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரதமர் அந்த அறிவுப்புகளை வெளியிட்டார். 

-----  

அனைத்துலக கடல் பகுதியில் Global Sumud Flotilla மனிதாபிமானப் பயணக் குழுவை இஸ்ரேல் வழிமறித்ததைக் பிரதமர் கண்டித்துள்ளார். 

  

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 மலேசியர்கள் உட்பட, அவ்வனைத்து ஆர்வலர்களுக்கு எந்த  ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

 

---- 

 

அரசாங்கத்தின் செயல்பாட்டு செலவீனங்களில் செய்யப்படும் சீர்த்திருத்தத்தால், சுகாதார அமைச்சின் சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்படாது! 

நோயாளிகளுக்கான சிகிச்சை, அவசர பராமரிப்பு, மருந்துகள் விநியோகம் உள்ள அடிப்படை சேவைகள் முழுவீச்சில் வழங்கப்படும் என KKM உத்தரவாதம் அளித்துள்ளது. 

சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை மேம்படுத்தும் வேலைகளும் நடைபெற்று வருவதாக அமைச்சு கூறியது. 

-----  

 

மலேசிய இந்திய உணவகங்களைப் பாதிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறையை கையாள அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் PRIMAS கேட்டு கொண்டுள்ளது. 

 

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்காற்றி வரும் இந்திய உணவகங்களைப் பாதிக்கும் இப்பிரச்னை குறித்து நீண்ட காலமாகவே பல்வேறு சந்திப்புகள் நடத்தப்பட்டு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டும் தீர்வு கிடைத்தபாடில்லை. 

 

மோசமாகி வரும் ஊழியர் திண்டாட்டத்தைத் தீர்க்கவில்லை எனில், அடுத்த மூன்று மாதங்களில் 100லிருந்து 200 இந்திய உணவகனங்கள் தங்களின் வியாபாரத்தை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என அது அச்சம் தெரிவித்தது. 

 

------  

 

KTMB நிறுவனத்தின் ETS மற்றும் Ekspres Rakyat Timuran சேவைகளுக்கான மடானி 30 கழிவு, இம்மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

 

RAAGA Aaha Siranta Isai!