Skip to main content
10 மலேசியர்கள் இஸ்ரேலால் தடுப்பு !

 

அனைத்துலக கடல் பகுதியில், Gaza நோக்கிய மனிதாபிமானப் பணிக்குழுவைச் சேர்ந்த Global Sumud Flotilla கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதில், அதிலிருந்த 10 மலேசிய உறுப்பினர்கள் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் !

Greece கடற்கரைக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட 22 கப்பல்களில் 6 கப்பல்களில் அவர்கள் இருந்ததாக, Sumud Nusantara கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

அவர்களின் தற்போதைய நிலை தெளிவாக இல்லை என்றும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது குறித்த முழு விவரங்களையும் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அம்மையம் கூறியது.

அந்த நிலைமை குறித்து, பிரதமருக்கும் பல அமைச்சர்களுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Greece மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர ஈடுபாடுகளுக்கு அரசாங்கத்தின் உதவியையும் அது கோரியுள்ளது.

--------

அரசு ஊழியர்களுக்காக வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமலுக்கு வந்த முதல் 10 நாட்களில், RON95 பெட்ரோல் உதவி தொகை, 1.9 மில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடிந்துள்ளது !

தற்போது, 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர்.

-----------

இன்று நடைபெற்ற ஏழாவது தொடர் சமூக சேவை உத்தரவின் கீழ், பொதுவிடங்களில் குப்பை வீசிய 20 பேர், சமூக சேவையைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர் !

அவர்களில் இருவர், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாவர்.

---------

Kuala Selangor-ரில், கால்வாய் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் 10 வயது சிறுவனின் உடல், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது !

---------

ஜொகூர் செகாமாட்டில், கடந்த மாதம் நிகழ்ந்த கைகலப்பில் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படும் ஆடவர் மீது, நீதிமன்றத்தில் குற்றஞ்ச்சாட்டப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!