
Manchester United, இன்றைய Champions லீக் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலை கோட்டைவிட்டதால், தமதணி, வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்துவிட்டதாக, கேப்டன் Bruno Fernandes தெரிவித்துள்ளார் !
எதிரணி வீரர்களுக்கு போதிய அழுத்தம் கொடுக்காததுமில்லாமல், பந்தை மீண்டும் கைப்பற்றுவதிலும் தமதணி தடுமாறிவிட்டதாக, அந்த கேப்டன் கூறினார்.
எதிரணியைத் தடுத்து ஆடுவதற்குப் பதிலாக, அதிக துணிச்சலுடன் முன்னேறி, அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் Fernandes குறிப்பிட்டார்.
பந்து எதிரணியிடம் இருந்தபோது, சக வீரர்கள் சரியாக செயல்பட்டு அதை தங்கள் கையில் எடுக்கவில்லை என்றும் Fernandes கூறி வருத்தப்பட்டார்.
Fernandes வருத்தப்பட்டதற்கு பதில் கொடுத்த யுனைடட் தலைமை பயிற்றுநர் Michael Carrick, ஆட்டத்தில் காட்ட வேண்டிய வேகத்தையும் தீவிரத்தையும், தமதணி வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக சொல்லி குறைபட்டுக்கொண்டார்.
யுனைடட் மோசமாக விளையாடியதற்கு, Carrick, ரசிகர்களிடம் மன்னிப்பும் கேடுக்கொண்டார்.
ஒரு United ரசிகராகப் பார்க்கும்போது, அத்தகைய ஆட்டம் ஏற்றுக்கொள்ள முடியாதது தான் எனவும் அவர் சொன்னார்.
இப்பருவ Champions லீக்கில், இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில், முதல் ஆட்டத்தில் மட்டுமே யுனைடட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
----------
France பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது !
இரண்டு மகளிர் இரட்டையர் ஜோடிகளான Pearly Tan - M.Thinaah, Ong Xin Yee - Carmen Ting-கும், இன்று 2-ஆம் சுற்றில் நேருக்கு நேர் மோதுவதே அதற்குக் காரணம்.
மேலும் சில தேசிய பிரதிநிதிகளும், இன்று விளையாடுகின்றனர்.
ஆடவர் இரட்டையர் Aaron Chia - Soh Wooi Yik-கும் அவர்களில் அடங்குவர்.
France பொது பூப்பந்து போட்டியை, இன்று மாலை இப்போது தொடங்கி, Astro அலைவரிசைகள் 815, 816 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
--------
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், காயம் காரணமாக, ஆட்டத்தின் பாதியிலேயே விலகிக்கொண்ட, தேசிய நீளம் தாண்டுதல் வீரர் Wong Kar Gee, வெண்கலப் பதக்கத்தோடு போட்டியை நிறைவுச் செய்தார் !
அதே வேளை, மலேசியா தனது 6 தங்கப் பதக்க இலக்கை எட்டியது.