
Dominik Szoboszlai, தொடைத் தசைக் காயத்திலிருந்து மீண்டு வர, Liverpool, கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் !
அதே வேளை, தற்காப்பு வீரர் Jeremie Frimpong, மீண்டும் ஏற்பட்ட தசைக் காயம் காரணமாக, சில காலம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அவ்வணியின் தலைமை பயிற்றுநர் Andoni Iraola தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை Brentford-டுக்கு எதிரான EPL ஆட்டத்தில், அவ்விருவரும் காயம் காரணமாகப் பாதியிலேயே வெளியேறினர்.
Hugo Ekitike, Conor Bradley உள்ளிட்டோர், இன்னும் காயப் பிரச்சனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
---------
Manchester City வீரர் Antoine Semenyo, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சுமார் எட்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் !
வார இறுதியில், Ipswich Town-னுக்கு எதிரான EPL ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய அந்த மத்தியயிடலாட்டக்காரர், ஆட்டம் முடிந்ததும் நொண்டியபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
----------
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், நாட்டுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ள, தேசிய Track சைக்கிளோட்ட வீரர் Zuhairie Ahmad Tarmizi-க்கு, பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் !
தகுதிச் சுற்றிலேயே, Zuhairie அப்போட்டிச் சாதனையை முறியடித்திருப்பது, அந்த வெற்றியை மேலும் சிறப்பாக்குவதாக, Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.