
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட TuJu வழிகாட்டிச் செயலியில் அண்மையில் ஏற்பட்ட சேவைத் தடைகளுக்கு, நெடுஞ்சாலை வாரியம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது !
அச்செயலியில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணத்தைக் கண்டறியவும், அதிகரித்துள்ள பயனர்களின் எண்ணிக்கையைக் கையாளும் திறனை மேம்படுத்தவும், அதன் உருவாக்குநருடன் தமது தரப்பு இணைந்து பணியாற்றுவதாக அவ்வாரியம் கூறியது.
அரசாங்கப் பணிகளின்போது, தரவுப் பாதுகாப்பு கவலைகள் மற்றும் இஸ்ரேலுடனான தொடர்புகள் காரணமாக, அரசு ஊழியர்கள் Waze செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
அதற்கு மாற்றாக, TuJu செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
----------
இதனிடையே, TuJu வழிகாட்டிச் செயலி தொடர்பான புகார்களைக் களைய, மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலக்கவியல் அமைச்சும் உறுதியளித்துள்ளது !
அந்தச் செயலியின் சேவையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என, பலர் கருத்துத் தெரிவித்துள்ளதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக, அமைச்சர் Gobind Singh Deo கூறினார்.
அரசாங்கப் பணியாளர்கள், Google Maps போன்ற, மாற்றுச் செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனக் கூறிய அவர், Waze செயலி பயன்பாட்டுத் தடை, பொதுமக்களுக்கு அல்ல என, தெளிவுப்படுத்தினார்.
---------
2024-ஆம் ஆண்டு முதல், சுகாதார அமைச்சிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர் !
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், தனியார் துறையில் பணியாற்றச் சென்றுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
சரவாக்கில், தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம், பொறுப்புணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் கையாளப்பட வேண்டும் !
இதுபோன்ற வன்முறை மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான சம்பவங்கள் அனைத்தும் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும் என்றும், மாநில, மகளிர், ஆரம்பகால குழந்தைப் பருவம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
---------
Perikatan Nasional-லின் பதிவை ரத்து செய்வதற்கான RoS அறிவிப்பை, நீதித்துறை மறுஆய்வு விசாரணை முடியும் வரை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது !